விழுப்புரம் அருகே போதை மாத்திரைகள், ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர் கைது!
விழுப்புரம்: விழுப்புரம் - சாலமேடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்ததில், விற்பனைக்காக வைத்திருந்த 68 போதை மாத்திரைகள், ஊசி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை மேற்கொண்டதில் பண்ருட்டி அருகே உள்ள சின்ன இளந்தம்பட்டைச் சேர்ந்த ஜெயகணேஷ் (25) என தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement