இடைப்பாடி அருகே கால்வாயில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள்
*பாலம் அமைக்க கோரிக்கை
இடைப்பாடி : இடைப்பாடி அருகே, கால்வாயில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள், பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, ஓனாம்பாறை, பில்லுக்குறிச்சி, எல்லமடை, மூலப்பாதை மற்றும் குள்ளம்பட்டி வழியாக கிழக்கு கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் தேவூர், புல்லாகவுண்டம்பட்டி பகுதியில் இருந்து கிழக்கு கரை கால்வாய் கடந்து நாமக்கல் மாவட்டம், வெப்படை வரை செல்கிறது.
இதில் புல்லாகவுண்டம்பட்டி பகுதியில் செல்லும் கிழக்கு கரை கால்வாய் பகுதியில், பாலம் இல்லாததால், அப்பகுதி மக்கள் செயற்கை முறையில் சிறிய தகர பாலம் அமைத்து கால்வாய் கரையை கடந்து, கொமாரபாளையம் வரை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், விவசாயிகள் என பலரும் தகரப் பாலத்தை கடந்து செல்கிறார்கள்.
ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு புதியதாக கால்வாயில் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.