விஜயகாந்தின் மூத்த சகோதரி காலமானார்: தேமுதிக இரங்கல்
சென்னை: விஜயகாந்தின் மூத்த சகோதரி விஜயலட்சுமி துரைராஜ் (78). மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அவர் காலமானார். விஜயகாந்தின் சகோதரி மறைந்தது விஜயகாந்த் குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த விஜயலட்சுமியின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான மதுரை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் இன்று நடக்கிறது. விஜயலட்சுமியின் மறைவுக்கு தேமுதிக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement