தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் கணிசமான வாக்கு பெற்றாலும் திமுக கூட்டணி வெற்றியை பாதிக்காது: திருமாவளவன் உறுதி

கோவை: கணிசமான வாக்குகளை விஜய் பெற்றாலும் திமுக கூட்டணியின் வெற்றியை அது பாதிக்காது என திருமாவளவன் கூறினார். கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று (நேற்று) பிரசாரம் துவங்குகின்ற விஜய்க்கு வாழ்த்துகள். இப்பொழுதுதான் அவரது களப்பணிகள் தீவிரமடைகிறது. விஜயின் பிரசாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று பலராலும் கேள்வி எழுப்பப்படுகிறது. கணிசமான வாக்குகளை விஜய் பெற முடியும்.

Advertisement

ஆனால், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் அது ஏற்படுத்தாது. தமிழகத்தில் ஒரு அணி வடிவமாக, வலுவாக இருக்கிறது என்றால் அது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே தவிர இன்னும் அது வடிவம் பெறவில்லை.விஜய் தனியாக ஒரு அணி கட்டுவார் என்ற ஒரு யூகம் இருக்கிறது. ஆனால் அதுவும் இன்னும் வடிவம் பெறவில்லை. பாஜ - அதிமுக பிரிந்தால் திமுக-வில் இருக்கின்ற கூட்டணி கட்சிகள் மாறுவதற்கு எந்த தேவையும் இல்லை.

அண்ணாமலை பாஜ கட்சிக்குள்ளேயே ஒரு அரசியல் செய்கிறார்.நயினார் நாகேந்திரன் தலைமையை ஏற்றுக் கொள்வதில் அண்ணாமலைக்கு சிக்கல் உள்ளது என்பது அவரது நடவடிக்கையில் தெரிகிறது. அண்ணாமலை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை விரும்பியதை போலவே, நயினார் நாகேந்திரனும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை நடவடிக்கைகள் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடியை உருவாக்குவது போன்று தான் தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News