உங்கள் விஜய்னு சொன்னாரே... ஆனா ஆறுதல் சொல்ல கூட வரலையே... வேல்முருகன்
திருச்சி: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தான் நடிக்கும் திரைப்படத்தில் வில்லனிடம் பேசுவது போன்று விஜய் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் விஜய் உங்களை பார்க்க வருகிறேன் எனக்கூறி நீங்கள் அழைத்ததன் பேரில் தான் உங்கள் ரசிகர்களும், பொதுமக்களும் அங்கே வந்தனர். அங்கு அவர்கள் செத்து மடிந்து கிடக்கும் போது, நீங்களும், உங்கள் கட்சி நிர்வாகிகளும் பத்திரமாக எவ்வாறு இல்லம் திரும்பினீர்கள். அவர்களுக்கு யார் ஆறுதல் கூறுவார். இந்த சம்பவத்துக்கு விஜய் மற்றும் தவெக கட்சி பொறுப்பேற்க வேண்டும்.
Advertisement
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement