தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் கூட்ட நெரிசலில் 41பேர் பலி தொடர்பாக உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் வீட்டிற்கு சென்று சிபிஐ விசாரணை

கரூர்: கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக வேலுச்சாமிபுரத்தில் இருந்த கடைக்காரர்கள, பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் என பலதரப்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை கரூர் டிஆர்ஓவின் நேர்முக உதவியாளர் அமுதா சந்தித்து பேசினார்.

Advertisement

பின்னர் மாலை 3 மணி அளிவில் 3 கார்களில் வேலுச்சாமிபுரம் சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து 3 குழுக்களாக பிரிந்து கூட்ட நெரிசலில் காயமடைந்து நேரில் வரமுடியாதவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்தினர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த பழனியம்மாள், கோகிலா ஆகியோர் இறந்த வீட்டிற்கு சென்று சிபிஐ அதிகாரிகள் அஙகு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதே போல் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேர் பின்னால் இருக்கும் வேலுச்சாமிபுரம் நான்காவது கிராஸ் பகுதிக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் கையில் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராக விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிபிஐ விசாரணை அலுவலகத்திற்கு நேற்று மாலை ஒரு வாகனத்தில் ஜெராக்ஸ் மெஷின், லேப்டாப், கூடுதல் டேபிள்கள், சேர்கள் கொண்டு வரப்பட்டன.

Advertisement