மக்களை விட தன்னுடைய பாதுகாப்புதான் விஜய்க்கு முக்கியம் சண்முகம் பேட்டி
திருவாரூர்: திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 41 பேர் இறப்புக்கு பின்னரும் இது வரையில் எவ்வித கவலையும் படாமல் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அதுதமிழக வெற்றி கழகமாக மட்டும்தான் இருக்க முடியும். சம்பவத்திற்கு காரணமானவரோ 20 நாட்கள் கழித்து சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் என டிஜிபி இடம் பாதுகாப்பு கேட்கிறார். அவரது கடிதத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் யாரும் இருக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். அப்படியென்றால் ஊரை காலி செய்துவிட்டு மக்கள் வெளியேற வேண்டுமா. பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு அரசு தான் நிபந்தனை விதிக்கும். ஆனால் இவரோ அரசுக்கு நிபந்தனை விதிக்கிறார். மக்களின் பாதுகாப்பை விட தன்னுடைய பாதுகாப்பு தான் முக்கியம் என்பதை கருதும் இவர் தொடர்ந்து திமுகவை மட்டுமே குறை சொல்லும் வகையில் அவதூறுகளை பரப்பி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.