விஜய்யும், கட்சியினரும் பொறுப்பேற்க வேண்டும்: ஜவாஹிருல்லா
ராமநாதபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அளித்த பேட்டியில், ‘‘கரூரில் சில நாட்களுக்கு முன் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. சிறு அசாம்பாவிதமும், சிறு காயமும் இல்லாமல் மக்கள் வருகை தந்து ஊருக்கு திரும்பி சென்றார்கள். காரணம் வந்தவர்கள் ஒரு ஒழுங்கை கடைப்பிடித்தார்கள். நடிகர் அரசியலில் குதிக்கும்போது அவரது கூட்டத்திற்கு ரசிகர்கள்தான் வருகிறார்களே தவிர, அரசியல்மயமாக்கப்பட்ட தொண்டர்கள் வருவதில்லை.
கரூர் சம்பவம் மிகவும் துயரமான சம்பவம். கரூரில் பாதுகாப்பு குறைபாட்டில்தான் சம்பவம் நடைபெற்றது என்று கூறுவது அபாண்டமானது மட்டுமின்றி, காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய குற்றச்சாட்டு. காவல்துறையினரால்தான் இந்த சம்பவம் நடைபெற்றது என்று கூறுவதும் மிகப்பெரிய அநியாயம், அக்கிரமம். கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யும், அவரது கட்சியினரும்தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார்.