கொள்கை இல்லாத விஜய் கட்சி: மு.வீரபாண்டியன் தாக்கு
தேனி: தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீட்டுக்காக கூட்டணி சேரக்கூடிய கட்சி அல்ல எங்களது கட்சி. சீட்டு என்பது எங்களுக்கு முக்கியமல்ல. கொள்கை மட்டுமே முக்கியம். பாஜகவை எதிர்த்து கொள்கையுடன், துடிப்புடன் போராடி வருகிறோம். இதற்காகவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
Advertisement
அதிமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம். விஜய்யின் த.வெ.க கொள்கை இல்லாத கட்சி. அவர்களுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது சாமானிய மக்கள்தான். ஆளுநருக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுப்பும் குரலும், எங்களது குரலும் தமிழக மக்களுக்கான குரல். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement