விஜய் களத்திற்கு வந்து மக்களை சந்திக்கணும்: பிரேமலதா அட்வைஸ்
திருச்செங்கோடு: விஜய் களத்திற்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த தெரிவித்தார். திருச்செங்கோட்டில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்று, பேசினார். பின்னர், பிரேமலதா அளித்த பேட்டி: ஜனவரி மாதம் நடக்கும் கட்சி மாநாட்டில், தொண்டர்கள் விரும்பும் மெகா கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்.
தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ, அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். விஜய் களத்திற்கு வர வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். நான் தினமும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். அதுபோல் அவர் செய்தியாளர்களை சந்தித்து, தனது செயல்பாடுகள் குறித்து விளக்கி கூற வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள காலை உணவு திட்டம், காப்பீடு திட்டம், இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் வரவேற்கிறோம். இவ்வாறு பிரேமலதா கூறினார்.