விஜய் பேச்சு முதிர்ச்சியற்றது: ஜவாஹிருல்லா தாக்கு
ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தவெக தலைவர் விஜய், அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையாத கருத்தை பேசி இருக்கிறார். திமுக கூட்டணியை நம்பி இருக்கிறது. நாங்கள் மக்களை நம்பி இருக்கின்றோம் என்று சொல்வது ஒரு அரசியல் முதிர்ச்சியற்ற கருத்தாகும். கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சிக்கு வருவது என்பது எல்லா கட்சிகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. இதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
Advertisement