விஜய் கால் தரையில் படுவதே இல்லை திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்: மன்சூர் அலிகான் பேட்டி
சென்னை: 2026 நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எனக்கு நம் நாட்டை நாசமாக்கும் எஸ்.ஐ.ஆர் தடுக்கப்பட வேண்டும். பாஜவை ஆதரிக்கும், அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் பாசிச கட்சிகள், அவர்களால் தமிழ்நாட்டிற்கு பயன் இல்லை. 2026ம் ஆண்டு திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். நானே அக்கட்சிக்காக வேலை செய்வேன். என்னுடைய போராட்டமும் பிரசாரமும் தரையில் கால் பதியும். விஜய் போல வானத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்க மாட்டேன். இந்த கால் தரையில் பட வேண்டும். அடிமட்ட மக்களை சென்று சந்திக்க வேண்டும். மார்க்கெட்டுகள், வயல்வெளிகள், சாலைகளில் இந்த கால் பட வேண்டும். வானத்தில் உலாத்திக் கொண்டு, வான தூதுவர்களாக இருக்க கூடாது. விமானத்திலேயே சென்று விட்டு விமானத்திலேயே வந்தால், பணக்காரனுக்கு தான் ஆதரவாக இருப்பார்கள். அரசியல் களத்தில் விஜய் எனக்கு இணையானவர் கிடையாது. அவரை பார்த்து நான் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. இது மட்டுமில்லாமல் கரூர் துயரம் குறித்து நான் பேசியதற்கு விஜய் எனக்கு ஒரு போன் கூட செய்து பேசவில்லை. இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.