தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய்க்கு வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

சென்னை: விழுப்புரம் மண்டல நிர்வாகிகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று ஆலோசனை நடத்தினார். பிறகு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: விஜய்யை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என்று கேட்கிறீர்கள். கண்டிப்பாக இந்த கூட்டம் ஓட்டாக மாறாது. அது எல்லா தலைவருக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும். இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பொருந்தும். கூட்டம் சேர்ந்துவிட்டால், அவையெல்லாம் ஓட்டாக மாறாது. விஜய் நல்ல பாதையில் செல்ல வேண்டும்.

Advertisement

தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்காக செய்யுங்கள். எல்லா அரசியல்வாதிகளுக்கும் வைக்கக்கூடிய வேண்டுகோள்தான் இது. மக்களில் ஒருவனாக இதைத்தான் சொல்லியிருப்பேன். நாட்டு மக்களான எங்களையும் கொஞ்சம் பாருங்கள், எங்களின் முன்னேற்றத்துக்காக வேலை செய்யுங்கள். எந்த இடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் உங்களை வைப்போம் என்று மக்கள் சொல்கிறார்கள்.

அதைத்தான் நானும் சொல்கிறேன். சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை மநீம தொடங்கிவிட்டது. திமுகவின் தலைமைக்கு நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம். அன்பாக, கண்ணியமாக இருக்கிறார்கள். 75 ஆண்டு கால கட்சி அது. எல்லா உரிமையையும் தட்டிக் கேட்டுவிட முடியாது. அவர்களது செயல்பாடுகளை தட்டிக் கேட்கக்கூடிய உரிமையை எல்லா மக்களுக்கும் கொடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதில் ஒருவனாக நான் கேட்கலாம். ஆனால், இதை கொடுங்கள், அதை கொடுங்கள் என்று 75 ஆண்டு கால கட்சியை எப்படி கேட்க முடியும்? எங்கள் தகுதியை நிரூபித்துக்கொண்டு, அதற்கு ஏற்ற மாதிரி தொகுதி கொடுங்கள் என்று கேட்பதுதான் நியாயமாக இருக்கும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Advertisement