விஜய் எப்படி ஒரு தலைவரா இருக்க முடியும்: நயினார்
கரூர் அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்தின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் நடந்தது துயரமான சம்பவம். இந்தியாவை உலுக்கி உள்ள மாபெரும் துயரமான சம்பவம். 39 பேர் இறந்துள்ளனர். ஒருவரின் உயிர் ஊசலாடி கொண்டு இருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். விஜய் எப்படி ஒரு தலைவரா இருக்க முடியும்.. இவ்ளோ பேர் இறந்து போயிருக்காங்க.. நேர்ல வந்து ஆறுதல் சொல்லணும்ல.. களத்தில் இருந்து ஆறுதல் சொல்லி இருந்து இருக்கணும். ரூ.20 லட்சம் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா? குறைந்தபட்சம் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்து இருக்கலாமே? இந்த சம்பவம் குறித்த விசாரணையை சுப்ரீம் கோர்ட் சிட்டிங் பெஞ்ச் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்தில் உடனே யாரையும் குறை சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.