விஜய் பிரச்சாரம் நடந்த இடத்தில் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக காவல்துறை வாதம்
கரூர்: விஜய் பிரச்சாரம் நடந்த இடத்தில் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. 1.20 லட்சம் சதுர அடி கொண்ட லைட் அவுஸ் பகுதியில் போலீஸ் அனுமதி வழங்கவில்லை என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. "லைட் அவுஸ் பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையில் உண்மை வெளிவரும்" என காவல்துறை தரப்பு வாதிட்டது. மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை என்று த.வெ.க. தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement