தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவை இருந்தால் விஜய்யை கைது செய்வோம்: அமைச்சர் துரைமுருகன் உறுதி

காட்பாடி: தேவை இருந்தால் விஜய்யை கைது செய்வோம் என்று அமைச் சர் துரைமுருகன் தெரி வித்துள்ளார்.  காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ‘கரூர் விவகாரத்தில் தவெக குறித்து நீதிபதிகள் சொல்வதுதான் முக்கியம். நீதிபதிகள் உண்மையை கூறி உள்ளார்கள். 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல, உலகமே பார்த்த ஒன்று. விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம்.

Advertisement

தேவையில்லாத சூழலில் பண்ண மாட்டோம். அனாவசியமாக நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம். கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஆதாரங்கள் என்பது தவிர்க்க முடியாமல் இருந்தால் அப்போது அரசு தனது கடமையை செய்யும். எங்களை யாராவது பயமுறுத்தி விடுவார்கள், முடக்கி விடுவார்கள் என சொல்வதற்கு தயாராக இல்லை.

எந்த கொம்பனாலும் எங்களை ஆட்டிப் பார்க்கவும், அசைத்துப் பார்க்கவும் முடியாது. யார் எந்த வேஷம் போட்டாலும், எந்த அணியில் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் வெற்றி பெறுவோம். பாஜவிற்கு ஒண்டிக்கொள்ளவும், தாங்கிக் கொள்ளவும் ஒரு இடம் வேண்டும். ஆகையால் யாருக்கு என்ன வந்தாலும் ஓடி ஓடி போய் பார்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement