விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது பண்ணுவோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர்: காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் இன்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் விவகாரத்தில் தவெக குறித்து நீதிபதிகள் சொல்வதுதான் முக்கியம், என்ன சொன்னாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் நீதிபதிகள் உண்மையை கூறி உள்ளார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி என எடப்பாடி கூறுகிறார்.
Advertisement
ஒவ்வொருத்தரும் அப்படித்தான் சொல்வார்கள். ஏன் சீமான் கூட சொல்லுவார் தேர்தல் நெருங்கும்போதும், தேர்தலில்தான் தெரியும். 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல. உலகமே பார்த்த ஒன்று. விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம். தேவையில்லாத சூழலில் பண்ண மாட்டோம். அனாவசியமாக நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement