விஜய்யை கைது பண்ணுங்க... அர்ஜுன் சம்பத்
திருப்பூர்: திருப்பூர் வலையங்காடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி, புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி: கரூரில் த.வெ.க. கூட்டத்தில் பலியான 41 பேருக்கு நீதி வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதற்கு முழு காரணம் த.வெ.க. தலைவா் ஜோசப் விஜய் தான்.
Advertisement
உயிரிழப்புக்கு காரணமான விஜய்யை கைது செய்ய வேண்டும். த.வெ.க.வை தடை செய்ய வேண்டும். இவா்கள் நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளும் பொதுமக்களுக்கு இடையூறாகவே இருந்துள்ளது. த.வெ.க. பதிவை ரத்து செய்யக்கோரி தேர்தல் கமிஷனிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவா் கூறினார்.
Advertisement