விஜய் பரப்புரையில் நடந்த துயரம்: விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்!
சென்னை: விஜய் பரப்புரையில் கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது. கடும் நெரிசலில் சிக்கி மிதிபட்டு மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும் என விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். அரசு வழங்கிய இழப்பீட்டு தொகையை ரூ.50 லட்சமாக வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement