வீடியோ கேம் விளையாடிய போது நடிகர் அக்ஷய் குமார் மகளிடம் நிர்வாண படம் கேட்ட கும்பல்
மும்பை: மும்பை காவல்துறை தலைமையகத்தில் ‘சைபர் விழிப்புணர்வு 2025’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அக் ஷய்குமார் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல ஆசைப்படுகிறேன். இப்போதெல்லாம் யாரென்றே தெரியாத அந்நியர்களுடன் விளையாடும் வீடியோ கேம் ஆப்ஸ்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
அப்படியான ஒரு வீடியோ கேம் விளையாட்டை என்னுடைய மகள் விளையாடிக்கொண்டிருந்தார். அந்த வீடியோ கேம் விளையாடும்போது, ‘நீங்கள் ஆணா? பெண்ணா?’ என மெசேஜ் வந்தது. அந்த மெசேஜுக்கு ‘பெண்’ என்று என்னுடைய மகள் பதிலளித்தார். அதற்கு உடனே, ‘உங்களுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்ப முடியுமா?’ என எதிர் தரப்பிலிருந்து கேள்வி வந்தது. உடனே என்னுடைய மகள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, என் மனைவியிடம் நடந்ததை கூறியிருக்கிறார். இப்படித்தான் எல்லா விஷயங்களும் தொடங்குகின்றன’ என்றார்.