தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கல்லறையில் வீடியோ எடுத்து வெளியிட்ட பிரபல ராப் பாடகர் சுட்டு கொலை: உருக்கமான பதிவு வெளியிட்ட காதலி

ஜார்ஜியா: வீட்டில் நடந்த தகராறில் பிரபல ராப் பாடகர் டி-ஹூட் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது காதலி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான டெவின் ஹூட் (33), தனது வீட்டில் நடந்த தகராறில் மற்றொரு நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி டெவின் ஹூட் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவத்தின்போது வீட்டில் எந்தவொரு பார்ட்டியும் நடைபெறவில்லை என ஹூட்டின் தாயார் யுலாண்டா தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்திற்கு மத்தியில், ஹூட் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட நகைச்சுவையான காணொளி ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லறை ஒன்றில் பேய் வேடமணிந்து, போலி ரத்தத்துடன் தோன்றும் அவர், ‘நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களா? நாங்கள் கல்லறையில் இறந்து கிடக்கிறோம்.

இன்றே இறந்துவிடுங்கள்; நீங்கள் இன்று இறந்தால், எங்களுடன் வந்து விளையாடலாம்’ என்று சிரித்தபடி பேசியுள்ளார். இந்தக் காணொளி தற்போது அவரது மரணத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, டி-ஹூட்டின் காதலியான கெல்சி ஃப்ரோஸ்ட் வெளியிட்ட பதிவில், ‘என் வாழ்க்கையின் காதலன் போய்விட்டார். ஒவ்வொரு இரவும் நான் அவருடன்தான் படுத்து உறங்குவேன். ஆனால் தற்போது அவர் இல்லை’ என சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

Related News