துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனின் மகனுக்கு பாஜவில் பதவி
திருப்பூர்: துணை ஜனாதிபதியான சி.பி.ராதாகிருஷ்ணனின் மகனுக்கு பாஜவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜவின் முன்னாள் மாநில தலைவருமான திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், இந்திய துணை ஜனாதிபதியாக உள்ளார். இந்நிலையில் தமிழக பாஜவின் பல்வேறு சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மாநில இணை அமைப்பாளராக, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மகன் ஹரி சஷ்டிவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜவின் பல்வேறு பொறுப்புகளை வகித்த பின்னர் ஆளுநராகவும், தற்போது துணை ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் மகனுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை பாஜவினர் வரவேற்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement