துணை ஜனாதிபதி தேர்தல்: 2 எம்பிக்களுக்கு ஜாமீன்
புதுடெல்லி: துணைஜனாதிபதி தேர்தலில் சிறையில் உள்ள காஷ்மீர் பாரமுல்லா தொகுதி எம்.பி. அப்துல் ரஷீத் வாக்களிக்க அனுமதி வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷீத் கடந்த 2019ம் ஆண்டு முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே போல் ஆந்திராவில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு ரூ.3,500 கோடி வரை நஷ்டம் ஏற்பட் ட வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ராஜம்பேட்டை எம்.பி. மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் துணைஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க விஜயவாடா ஏசிபி நீதிமன்றம் நேற்று எம்.பி. மிதுன்ரெட்டிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
Advertisement
Advertisement