குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் சென்னை வருகை..!!
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் சென்னை வருகிறார்.அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணிசார்பில் போட்டியிடும் வேட்பாளராக உள்ள முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 24ம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். சென்னைக்கு வரும் சுதர்சன் ரெட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றியும், ஆதரவும் கேட்க உள்ளார். மேலும், இந்தியா கூட்டணி கட்சியினுடைய தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார்.
ஏற்கனவே இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதியாக உள்ள சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டு நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். சிபி ராதாகிருஷ்ணன் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார். அவரது சுற்றுப்பயணம் முடிவு செய்யாத பட்சத்தில் அவர் இன்று அல்லது நாளை பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல உள்ளார்.