தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குரோபேக்கில் வெட்டிவேர் சாகுபடி! ஈரோடு உழவரின் அசத்தல் டெக்னிக்

வெட்டிவேர் சாகுபடி நிச்சயம் லாபம் தரும் சாகுபடிதான். ஆனால் அதை சில குறிப்பிட்ட பகுதி களில்தான் செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பெரியப்பட்டு, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களிலும், மண் இலகுவாக உள்ள வேறு சில பகுதிகளிலும் வெட்டிவேர் விவசாயம் செழிப்பாக நடந்து வருகிறது. மற்ற இடங்களில் வேறு நெல், கரும்பு தவிர்த்து வேறு மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்தாலும் வெட்டிவேர் அவ்வளவாக சாகுபடி செய்யப்படுவதில்லை. அதற்கு காரணம் இது நம் மண்ணுக்கு வருமா? வளர்ந்து பலன் தருமா? என யோசிப்பதுதான். ஆனால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பி.கே.வடிவேல் குரோபேக்கில் வெட்டிவேரை சாகுபடி செய்து அசத்தி வருகிறார். இந்த குரோபேக் வெட்டிவேர் சாகுபடி குறித்து அறிந்துகொள்ள கோபி டூ ஈரோடு மெயின் ரோட்டில் உள்ள வடிவேலுவின் கிராமமான பொலவக்காளிபாளையத்திற்கு சென்றோம். நம்மை வரவேற்று வெட்டிவேர் வயலைச் சுற்றிக் காண்பித்தபடியே பேசத் தொடங்கினார்.

Advertisement

``தாத்தா, அப்பா தொடங்கி இப்போதைய எங்கள் தலைமுறைக்கும் விவசாயம்தான் வாழ்வாதாரம். எங்கள் கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் உள்ளன. அதில் 900 குடும்பங்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழில். டேமில் இருந்து நீர் கிடைப்பதால் வருடம் முழுவதும் நிலத்தில் ஏதாவது விதைத்துக்கொண்டே இருப்போம். பெரும்பாலும் கரும்பு, வாழை, காய்கறிப்பயிர்கள், கிழங்கு போன்றவைதான் எங்கள் ஊரின் பிரதான சாகுபடிப்பயிர்கள். எனக்கு சொந்தமான 15 ஏக்கரில் 6 ஏக்கர் கரும்பு, 6 ஏக்கர் வாழை பயிரிட்டு இருக்கிறேன். மீதமுள்ள இடத்தில் சேனைக்கிழங்கு சாகுபடி செய்து வருகிறேன். நான் எங்கள் பகுதியின் சொட்டுநீர்ப் பாசன அமைப்பின் தலைவராக இருப்பதால் எங்கள் பகுதியில் நடைபெறும் விவசாய கண்காட்சிகளுக்கு தவறாமல் செல்வேன். அப்படி நான் ஒரு கண்காட்சிக்குச் செல்லும்போதுதான் வெட்டிவேர் சாகுபடி சார்ந்த தகவல்களை தெரிந்துகொண்டேன். வெட்டிவேருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, நாற்றுநடுதல் முதல் அறுவடை வரை கூட இருந்து, உர மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மைக்கு உதவி புரிந்து, அறுவடை செய்யப்படும் வெட்டிவேரையும் அவர்களே வாங்கிச் செல்வதாக கண்காட்சியில் இடம்பெற்ற ஒரு ஸ்டாலில் கூறினார்கள்.

அப்போது எனக்கு வெட்டிவேர் சார்ந்து எதுவுமே தெரியாது. இருந்தபோதும் இந்த வெட்டிவேர் சாகுபடியை தொடங்கலாமென யோசனை வந்தபடி இருந்தது. இதனால் வெட்டிவேர் சாகுபடி செய்ய உதவும் அந்த ஸ்டாலை தொடர்புகொண்டு எனது யோசனையைச் சொன்னதும் அவர்களே வெட்டிவேர் சாகுபடிக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதன்படி, தற்போது எனது நிலத்தில் ஒரு ஏக்கரில் வெட்டிவேர் சாகுபடி செய்துவருகிறேன். வெட்டிவேர் சாகுபடி செய்யப்போகிறோம் என முடிவான பிறகு, ஏற்கனவே வெட்டிவேர் சாகுபடி செய்து கொண்டிருக்கும் கடலூர், சிதம்பரம் பகுதி விவசாயிகளை நேரடியாக சென்று பார்த்தேன். வெட்டிவேர் சாகுபடியில் உள்ள நன்மைகள், பராமரிப்பு, பற்றி தெரிந்து கொண்டேன். தொடர்ந்து மூன்று முறை வெட்டிவேர் சாகுபடி செய்யும் விவசாயிகளை சந்தித்த பின் நான் எனது நிலத்தில் இந்த சாகுபடியைத் தொடர்ந்தேன். வெட்டிவேரை பொதுவாக மூன்று முறையில் சாகுபடி செய்யலாம். நேரடியாக நிலத்திலும், குரோபேக்கிலும், பெரிய பிவிசி பைப்பிலும் சாகுபடி செய்யலாம். அதாவது மண் நன்றாக உதிரியாக இருக்கக்கூடிய கடலோரப் பகுதிகளில் நேரடியாக பயிரிடலாம். இறுகிப் போயிருக்கும் நிலத்தில் குரோ பேக் மற்றும் பிவிசி பைப்பில் சாகுபடி செய்யலாம். நான் குரோபேக்கில் சாகுபடி செய்து வருகிறேன். இந்த வெட்டிவேரை சராசரியாக 10 சென்டிற்கு 1000 குரோபேக் வைத்து சாகுபடி செய்யலாம். நான் ஒரு ஏக்கரில் 10 ஆயிரம் குரோபேக் வைத்து சாகுபடி செய்கிறேன்.

நாற்று, குரோபேக், மணல், உரம் என ஒரு குரோபேக்கில் வெட்டிவேர் சாகுபடி செய்ய சராசரியாக ரூ.150 செலவு ஆகும். அதன்படி, 10 சென்டில் இந்த சாகுபடி செய்ய ஒரு லட்சத்தி ஐம்பது ஆயிரம் செலவாகும். வெட்டிவேரில் நூற்றுக்கணக்கான ரகங்கள் இருக்கின்றன. பொதுவாக, கடற்கரை ஓர ஊர்களில் வளர்க்கப் படும் வெட்டிவேர் சர்பத் தயாரிக்கவும், அழகு சாதனப்பொருள் தயாரிக்கவும், அலங்காரப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும். ஆனால் இந்த வெட்டிவேரை ஆயில் (oil) தயாரிப்புக்காக வாங்கிச் செல்கிறார்கள். இந்த ரக வேரில் இருந்து அதிகப்படியான ஆயில் கிடைப்பதால், இதற்காக மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. இதை 10 முதல் 12 மாதங்களில் வேரின் வளர்ச்சியைப் பொருத்து அறுவடை செய்யலாம். இதற்கு தெளிப்பு முறையில் நீர்ப்பாசனம் செய்வதே சிறந்தது. அதேபோல மழைக்காலங்களில் நீர் பாய்ச்ச அவசியமில்லை. வெட்டிவேர் வளர்ச்சிக் காலங்களில் நோய் தாக்குதலோ அல்லது பூச்சி தாக்குதலோ ஏற்பட்டால், வெட்டிவேர் நாற்று வாங்கியவர்களிடம் சொல்லிவிடுவேன். அவர்கள், உடனடியாக எனது நிலத்திற்கே வந்து நோய் மேலாண்மைக்கு உதவுகிறார்கள். அறுவடையின்போது வெட்டிவேரில் உள்ள ஆயில் அளவு எவ்வளவு என்பதைப் பொருத்து இதனை விலை நிர்ணயம் செய்து வாங்கிச் செல்கிறார்கள். சராசரியாக ஒரு குரோபேக்கில் 2 முதல் 3 கிலோ வெட்டிவேர் கிடைக்கும். ஒரு கிலோ

வெட்டிவேருக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை விலை கிடைக்கிறது. ஒரு கிலோ வெட்டிவேரை ரூ.150 என விற்றாலே, ஒரு குரோபேக்கில் இருந்து சராசரியாக கிடைக்கும் 2.5 கிலோ வெட்டிவேர் மூலம் ரூ.375 வருமானமாக பார்க்கலாம். அந்த வகையில், ஒரு குரோபேக்கிற்கு நாம் ரூ.150 செலவு செய்தாலும் கூட ரூ.225 லாபமாக கிடைக்கும். அப்படிப் பார்த்தால் ஒரு ஏக்கரில் உள்ள 10 ஆயிரம் குரோபேக்கில் பல லட்சங்களை லாபமாக எடுக்கலாம். வெட்டிவேர் சாகுபடி செய்வது இதுதான் முதல்முறை என்றபோதும், இந்த விவசாயத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது’’ என உற்சாகம் பொங்க பேசி முடித்தார்.

தொடர்புக்கு:

பி.கே.வடிவேல்: 88703 28888.

வெட்டிவேர் சாகுபடி குறித்து வேளாண் வணிக மேலாண்மையில் பி.எஸ்சி பட்டம் பெற்ற ஹேமலதா பேசும்போது, வெட்டி வேரில் இருந்து தயாரிக்கப்படும் ஆயில் மருத்துவம் மற்றும் பர்ஃபியூம் தயாரிக்க பயன்படுவதால் வெட்டிவேர் சாகுபடியை பல விவசாயிகள் கையில் எடுத்திருக்கிறார்கள். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்தால் சராசரியாக 30 டன் வரை வெட்டிவேர் எடுக்கலாம். ஒரு டன் வெட்டிவேரில் இருந்து சராசரியாக 12 முதல் 15 கிலோ ஆயில் எடுக்கலாம். ஒரு லிட்டர் வெட்டிவேர் ஆயிலை அதன் கெமிக்கல் கண்டன்ட் பொருத்து ரூ.34 ஆயிரம் முதல் விற்பனை செய்யலாம் என்கிறார்.

வெட்டிவேருக்கு அதிகப்படியான நீர் பாய்ச்சினால் செடியானது வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்தில் மாறும். அதற்கு வெயில் காலங்களில் மாலை நேரத்தில் உரமிடுவதற்கு முன்பும், பின்பும் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். அதுவும் தெளிப்பு முறையில் நீர் தெளிப்பதே சிறந்தது.

Advertisement

Related News