வேப்பனஹள்ளியில் மழையால் உழவு பணிகள் தீவிரம்
வேப்பனஹள்ளி : வேப்பனஹள்ளி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால், நீரின்றி வறண்டு காணப்பட்ட வயல்வெளிகளில், தண்ணீர் தேங்கியது.
Advertisement
இதைத் தொடர்ந்து விவசாயிகள் தற்போது சோளம், கொள்ளு, துவரை ஆகிய பயிர்களை விதைப்பதற்காக நிலத்தை சமன் படுத்துதல், ஏர் உழுதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், போதிய மழையின்றி வாடிக்கொண்டிருந்த நிலக்கடலை பயிர்களும், தற்போது பெய்த தொடர் மழையால் துளிர்க்க ஆரம்பித்துள்ளன. மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Advertisement