வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு
12:28 PM May 21, 2024 IST
Share
சென்னை : வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அவகாசம்கோரி 10வது முறையாக சிபிசிஐடி மனு அளித்துள்ளது. வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.