வெனிசுலா எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவிற்குள் அதிக அளவு போதைப்பொருள் வெனிசுலாவில் இருந்து கடத்தப்படுவதாக கூறி வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ அரசாங்கத்திற்கு எதிராக அதிபர் டிரம்ப் அரசாங்கம் தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது. ஆனால், சீனாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதியாளராகவும், உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடாகவும் கருதப்படும் வெனிசுலாவின் வளங்களை அமெரிக்கா திருடப் பார்ப்பதாக வெனிசுலா குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் வெனிசுலா கடற்கரையோரம் ஒரு பெரிய எண்ணெய் கப்பலை சிறைபிடித்து உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் என டிர்ப் தெரிவித்தார். இதனால் அமெரிக்கா-வெனிசுலாஇடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement