வேலூர் ஓட்டேரி கரையோர பகுதிகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வீச்சு: பொதுமக்கள் அச்சம்
Advertisement
இதனை அவ்வழியாக சென்ற குளவிமேடு, பள்ளஇடையம்பட்டி, மூஞ்சூர்பட்டு கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சிலிண்டர்கள் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில், இதுகுறித்து அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் பாபி கதிரவனிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘ஓட்டேரியில் இருந்து குளவிமேடு செல்லும் சாலையோரம் நாளுக்குநாள் மர்ம ஆசாமிகள் மருத்துவக்கழிவுகள் மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதி குப்பை கிடங்காக மாறி வருகிறது. தற்போது குப்பைகளுடன் 2 சிலிண்டர்களை வீசி சென்றுள்ளனர். இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Advertisement