வேலூர் சிருஷ்டி பள்ளிகளில் சிருஷ்டி எடுடாக் 4.0 கருத்தரங்கம்
சிறப்பு விருந்தினராக விஐடி, வேலூரின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்தியா பெண்டா ரெட்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது, மாணவர்கள் தங்களை உருவாக்கி கொள்ளும் திறனும், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்ளும் திறனும் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவின்(ஏஐ) வளர்ச்சி எவ்வாறு வாழ்க்கையை மாற்றி வருகிறது என்பதை விளக்கியதுடன், நேரத்தை வீணாக்காமல் புத்திசாலியாக பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி பேசினார்.
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் உரையாடல் கணிசமான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, சிருஷ்டியின் பழைய மாணவரும், யாகன் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லேனா சேகர் உரையாற்றினார்.
மற்ற நிறுவனங்களில் பணிபுரியாமல், தன்னிறைவாக நிறுவனம் தொடங்கிய அவரது பயணம் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமளித்தது. மாணவர்கள் தொழில் முனைவோராக எப்படி உருவாகலாம் என்பதையும், அவர் உருவாக்கிய தயாரிப்புகள் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் பகிர்ந்தார். அவர் நிறுவனம் சிருஷ்டி பள்ளியில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தை நிறுவியதையும் மாணவர்கள் பெருமையுடன் ஏற்றுக்கொண்டனர்.
இன்னொரு பழைய மாணவியான காயத்ரி ரமேஷ், எல்.டி. ராஜ் அண்டு கோ நிறுவனத்தில் மூத்த கணக்காய்வாளர் உரையாற்றினார். சிருஷ்டி பள்ளியில் அவர் கடந்த கால அனுபவங்கள் மற்றும் சிஏ படிப்பின் சவால்கள் குறித்து சிறப்பாக பகிர்ந்தார்.
சிருஷ்டி எடுடாக் 4.0 பள்ளி கல்வியை வாழ்க்கை பயணத்துடன் இணைக்கும் ஒரு அருமையான மேடையாக இருந்தது. இத்தகைய நிகழ்வுகள் மூலம், சிருஷ்டி பள்ளிகள் மாணவர்களின் விரிவான மற்றும் அனுபவ அடிப்படையிலான கற்றலுக்கு உறுதியான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது.