வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை ஜனவரி முதல் தொடங்கும்: தெற்கு ரயில்வே தகவல்
சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை ஜனவரி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிவேக சோதனைக்கு முன்பு தெற்கு ரயில்வே இறுதிகட்டப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிவேக சோதனைக்கு பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கப்படும். பாதுகாப்பு ஆணையர் சோதனைக்கு டிசம்பர் பாதியில் விண்ணப்பிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் சரக்கு ரயிலை பயன்படுத்தி புதிய வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement