வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை..!!
சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் அரசு பதில்தர ஆணையிடப்பட்டுள்ளது. ஸ்டிக்கர் தடை தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் மத சின்னம், கட்சித் தலைவர்கள், நடிகர்களின் படங்களை ஓட்டத் தடை வேண்டும். பேருந்துகளின் பின்புறம், இருபுறங்களிலும் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தவைக்கப்பட்டது.