தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

5 ஏக்கரில் பந்தல் காய்கறி...ஆண்டு முழுவதும் அமோக விளைச்சல்!

அரசுப்பணியாளர்கள், ஐ.டி. ஊழியர்கள், வெளிநாட்டு வேலையிலிருந்து திரும்பியவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் என பல தரப்பினரும் தற்போது விவசாயம் பக்கம் திரும்பி முத்திரை பதித்து வருவதை நாம் அறிவோம். ஆனால், நாமக்கல்லைச் சேர்ந்த கணேசன், ஒரு பாரம்பரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து வேறு தொழிலைத் தேர்ந்தெடுத்தவர். அந்தத் தொழிலில் நஷ்டம் வரவே, மீண்டும் விவசாயத்திற்கே திரும்பியிருக்கிறார். பழைய தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், பிள்ளைகளின் படிப்பு என அனைத்தையும் விவசாயத்தில் கிடைத்த லாபத்தில் இருந்தே ஈடுகட்டியிருக்கிறார். அப்படி என்ன விவசாயம் செய்கிறார்? கணேசனது விவசாய முறை என்ன? என்பது பற்றித் தெரிந்துகொள்ள நாமக்கல் அடுத்த காதப்பள்ளி அருகே மட்டைப்பாறை புதூரில் உள்ள அவரது வயலுக்குச் சென்றோம். தோட்டம் முழுவதும் செழிப்பாக வளர்ந்திருந்த பந்தல் காய்கறிளை அறுவடை செய்யும் பணியில் பிசியாக இருந்த கணேசன், நமக்கும் சற்று நேரம் ஒதுக்கி பேசத் தொடங்கினார்.

Advertisement

`` நெல், சோளம், சிறுதானியம்தான் தாத்தா காலத்து விவசாயம். அப்பா காலத்திலுமே அந்த விவசாயம் தொடர்ந்தது. நான் அப்பாவுக்குத் துணையாக விவசாய வேலைகள் செய்வேன். அப்படித்தான் எனக்கு விவசாயம் அறிமுகமானது. இருந்தபோதும் எங்கள் கிராமத்தில் விவசாயம் பெரிதளவிற்கு யாரும் செய்யவில்லை. நானுமே விவசாயத்தைத் தொடராமல் வேறு தொழில் செய்து வந்தேன். அந்தத் தொழிலும் நஷ்டத்தில் முடிய, வேறு வழியில்லாமல் பிழைப்பிற்காக விவசாயத்திற்கு வந்தேன். இப்போது அந்த விவசாயம்தான் எனக்கு முழு வாழ்வாதாரமே. கடந்த பத்து வருடங்களாகத்தான் குடும்பத்தோடு சேர்ந்து விவசாயம் செய்து வருகிறேன். ஆரம்பத்தில், 30 சென்டில் கத்தரிக்காயும், 20 சென்டில் வெண்டைக்காயுமாக எனது விவசாயத்தைத் தொடங்கினேன். தற்போது ஐந்து ஏக்கரில் வருடம் முழுவதும் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்து வருகிறேன். ஆரம்பத்தில் சிறிதளவு சாகுபடி செய்து உற்பத்திப் பொருளை உழவர் சந்தைக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்வேன். அங்கு செல்லவும்தான் பந்தல் காய்கறிகளுக்கு நல்ல மவுசு இருப்பது தெரிய வந்தது. அதனால்தான் நான் பந்தல் காய்கறிகள் சாகுபடிக்குத் திரும்பினேன்.

ஆரம்பத்தில் ஒன்றரை லட்சம் செலவு செய்து சாகுபடிக்குத் தேவையான பந்தல் அமைத்தேன். அந்தப் பந்தலில்தான் இப்போது வரை சாகுபடி செய்து வருகிறேன். ஒவ்வொரு சீசனுக்கும் தகுந்தபடி காய்கறிகளை மாற்றி மாற்றி சாகுபடி செய்து வருகிறேன். பீர்க்கன், பாகல், சுரைக்காய், புடலை, அவரை என சாகுபடி செய்து வருகிறேன். கடந்த தீபாவளிக்கு பீர்க்கன், அவரை சாகுபடி முடிய, தற்போது புடலையும், சுரைக்காயும் விளைச்சல் தருகின்றன. பந்தல் காய்கறிகளுக்கென்று தனியாக ஐந்து ஏக்கர் இருக்கிறது. இதில்தான் அனைத்து பந்தல் காய்கறிகளையும் சாகுபடி செய்கிறேன். பொதுவாக, அனைத்து காயையுமே ஒரு ஏக்கரில்தான் சாகுபடி செய்கிறேன். புடலையும், சுரைக்காயும் தலா ஒரு ஏக்கரில் இருக்கிறது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்ய எனக்கு அரைக்கிலோ விதைகள் தேவைப்படுகின்றன. ஹைபிரிட் விதைகள்தான் பயன்படுத்துகிறேன். அதிக விளைச்சல், ஒரே அளவிலான காய்கள் மற்றும் காய்கள் விளைந்த பிறகு பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் மார்க்கெட்டில் இந்த ஹைபிரிட் காய்கள்தான் நன்றாக விற்பனை ஆகின்றன. அதனால், நானும் அந்த விதைகளை வாங்கி பயன்படுத்துகிறேன். இந்த விதைகளை விதைப்பதற்கு முன்பு நிலத்தை நன்கு உழுதுவிடுவேன். பின், ஒரு ஏக்கருக்கு ஒரு டன் என்ற வீதத்தில் தொழுஉரத்தை பயன்படுத்துவேன். நான் வரிசை முறையில் விதைப்பதால், எங்கு விதைக்கிறேனோ அங்கு மட்டுமே தொழுஉரத்தை இடுவேன். நிலம் முழுவதும் தொழுஉரம் பயன்படுத்தினாலும், தேவையில்லாத களைகள் முளைக்கும். அதேபோல, அனைத்துச் செடிகளுக்கும் டியூப் முறையில் நீர் கொடுக்கிறேன். விதைத்து 3வது நாளில் பீர்க்கன் முளைக்கத் தொடங்கும். மற்ற விதைகள் 7ல் இருந்து 10ம் நாளில் மண்ணை விட்டு வெளியே வளரத் தொடங்கும். பின், செடி வளர வளர ஒவ்வொரு பருவத்திற்கும் தகுந்தபடி உரம் கொடுக்க வேண்டும். பந்தல் காய்கறிகள் பந்தலுக்குச் செல்வதற்கு முன்பு செடியை கிள்ளிவிட வேண்டும். மேலும், பந்தலில் கொடியை ஏற்றி கட்டிவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், கொடி விரைவாகவும் நன்றாகவும் வளரும்.

சில காய்கறிகள் ஒன்றரை மாதத்தில் இருந்தும் சில காய்கள் இரண்டு மாதங்களில் இருந்தும் அறுவடைக்குத் தயாராகும். அனைத்துக் காய்கறிகளிலும் இரண்டு மாதங்கள் வரை அறுவடை எடுக்கலாம். அப்படி அறுவடையாகிற காய்கறிகளை ஒருநாள் விட்டு ஒருநாள் சாகுபடி செய்கிறேன். பாகற்காயில் ஒரு அறுவடைக்கு 700 கிலோ, புடலையில் ஒரு அறுவடைக்கு 800 கிலோ, சுரைக்காயில் ஒரு அறுவடைக்கு 600 கிலோ என தினமும் எனது தோட்டத்தில் சாகுபடி நடந்தபடி இருக்கும். ஒரு ஏக்கரில் ஒரு பந்தல் காய்கறியில் இருந்து ஒரு சீசனுக்கு 17ல் இருந்து 20 டன் உற்பத்தி செய்கிறேன். இப்படி, வருடம் முழுவதும் எல்லா நாட்களிலும் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்கிறேன். நாட்டு விதைகள் சீசனுக்குதான் விளையும். ஆனால், ஹைபிரிட் விதைகள் வருடம் முழுவதும் விளையும். சராசரியாக எனது தோட்டத்தில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு டன் காய்கறிகள் வெளியேறுகிறது. இவை அனைத்துமே, நாமக்கல் காய்கறி மார்க்கெட்டிற்குத்தான் செல்கிறது. அங்குள்ள 200 கடைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. பந்தல் காய்கறிகளை பொருத்தவரை திடீரென நோய்த்தாக்குதல் ஏற்படும். அதேபோல், காய்கள் தெளிச்சியாக இருக்க, ஒரே அளவில் வளர என அனைத்திற்கும் உரம் இருக்கிறது. அனைத்தையும் சரியான பருவத்தில் கொடுக்க வேண்டும். அதிக வியாபார ரீதியான சாகுபடிக்கு இயற்கை முறை விவசாயம் சரிவராது என்பது என் கருத்து. தினமும் ஒரு டன் சாகுபடி என்ற கணக்கில் வருடம் முழுவதும் எனது தோட்டத்தில் பந்தல் காய்கறிகளை சுழற்சி முறையில் உற்பத்தி செய்கிறேன். பலருக்கும் பந்தல் காய்கறிகள் சாகுபடி குறித்து ஆலோசனையும் வழங்கி வருகிறேன்’’ என மகிழ்வோடு பேசி முடித்தார்.

தொடர்புக்கு:

கணேசன்: 99408 11699.

ஆண்டுக்கு ரூ.20 லட்சம்

ஒரு ஏக்கரில் பந்தல் காய்கறிகளை விதைத்து அறுவடை செய்து முடிக்கும் வரை ஒரு லட்சம் செலவாகிறது என்கிறார் கணேசன். விதை, உழவு, வேலையாட்கள், உரங்கள் என அனைத்திற்கும் இவ்வளவு செலவாகும். அதேபோல், அனைத்து வகை காய்கறிகளிலும் இருந்து செலவெல்லாம் போக, மாதம் 2 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது. சராசரியாக ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய் தனது காய்கறி விவசாயத்தில் இருந்து லாபமாக மட்டும் கிடைக்கிறது என்கிறார் கணேசன்.

ஐந்து ஏக்கரில் பந்தல் காய்கறிகள் சாகுபடி போக 15 ஏக்கரில் நெல், மரவள்ளி, வால் சுரைக்காய், செடி அவரை, மக்காச்சோளம் என வேறு சில பயிர்களையும் சாகுபடி செய்து வருகிறார்.

Advertisement