வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்தது: காய்கறி விலை 3 மடங்கு உயர்வு
அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகிறது. தற்போது காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்ததால் காய்கறிகளின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ வெங்காயம் 18 ரூபாயில் இருந்து 25க்கும் சின்ன வெங்காயம் 25 ரூபாயில் இருந்து 50க்கும் தக்காளி 15 ல் இருந்து 50க்கும் உருளை கிழங்கு 18ல் இருந்து 30க்கும் கேரட் 10 ரூபாயில் இருந்து 50க்கும் பீன்ஸ் 35 ல் இருந்து 90க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், பீட்ரூட் 20ல் இருந்து 30க்கும் சவ்சவ் 20 ரூபாயில் இருந்து 30க்கும் முள்ளங்கி 20 ல் இருந்து 28க்கும் முட்டை கோஸ் 10 ல் இருந்து 28 க்கும் வெண்டைக்காய் 12 ரூபாயில் இருந்து 30க்கும் கத்திரிக்காய் 10ல் இருந்து 25 க்கும் காராமணி 20 இருந்து 40க்கும் பாவற்காய் 15 ல் இருந்து 40க்கும் புடலங்காய் 10ல் இருந்து 25க்கும் சுரைக்காய் 10ல் இருந்து 20க்கும் சேனை கிழங்கு 40 ல் இருந்து 50க்கும் முருங்கைக்காய் 30 ரூபாயில் இருந்து 40க்கும் மற்றும் காலிபிளவர் 10 இருந்து 20க்கும் வெள்ளரிக்காய் 15ல் இருந்து 20க்கும் பச்சை மிளகாய் 20ல் இருந்து 40க்கும் பட்டாணி 80 ல் இருந்து 100க்கும் இஞ்சி 75 ரூபாயில் இருந்து 100க்கும் பூண்டு 50ல் இருந்து 100க்கும் அவரைக்காய் 15 ரூபாயில் இருந்து 50க்கும் விற்பனையாகிறது.
இதுதவிர, பீரக்கங்காய் 25 ரூபாயில் இருந்து 30க்கும் எலுமிச்சை 30ல் இருந்து 90க்கும் நூக்கல் 25 ரூபாய்க்கும் கோவக்காய் 10ல் இருந்து 30க்கும் கொத்தவரங்காய் 20ல் இருந்து 25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.