வீரப்பன் வழக்கு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2.59 கோடி இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணை!
சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2.59 கோடி இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவது அரசின் கடமை. நிலுவைத் தொகை வழங்க உத்தரவிட்டு ஓராண்டாகியும் வழங்காதது நீதிமன்ற அவமதிப்பு செயல். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது என கூறிய ஐகோர்ட், பாக்கி இழப்பீட்டுத் தொகை வழங்கியது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement