வேதாரண்யத்தில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி மும்முரம்
கடந்த மாதம் பருவம் தவறி பெய்த பலத்த மழையால் உப்பங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் உப்பு உற்பத்தி துவங்கியது. இதனால் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து உப்பளங்களில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரமாக வெயில் அடித்து வருவதால் உப்பு உற்பத்தி துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உற்பத்தி செய்து சேமித்து வைத்திருந்த உப்பை விற்பனைக்காக வெளியூர்களுக்கு லாரிகளில் அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.
தற்போது ஒரு டன் உப்பு ரூ.2,000 ரூ.2,500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். கடந்த மாதம் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது வெயில் அடித்து உப்பு உற்பத்தி மும்முரமாக நடந்து வந்தாலும் இந்தாண்டு உற்பத்தி இலக்கான 6 லட்சம் இலக்கை எட்டுவது கடினம் தான் என்றனர்.