பல்வேறு வழிகளில் ரஷ்யாவுக்கு அழுத்தம் குடுத்து வரும் டிரம்ப்: முப்படைகளையும் களமிறக்கிய புதின்!
மாஸ்கோ: அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு வழிகளில் ரஷ்யாவுக்கு அழுத்தம் குடுத்து வரும் நிலையில், நேற்று ரஷ்ய செய்த சம்பவம் தான் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி மூன்று ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இருதரப்புக்கும் நடந்து வரும் போரால் உலகளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா அதிபர் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அலஸ்காவில், ரஷ்யா அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைனை அளிக்காமல் ஒய்யமாட்டேன் என புதின் திட்டவட்டமாக தெரிவித்ததால் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்பாடு எட்டப்படவில்லை. இதை தொடர்ந்து ஹங்கேரியில் நடக்கும் மாநாட்டில் புதினை சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதில் உடன்பாடு இல்லை என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் கடுப்பான டிரம்ப், ரஷ்யா அதிபர் புதின்னுடன் பேசுவதால் எந்த பயனும் இல்லை என்றும் நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் காட்டமாக தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்கா அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் சந்திக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழலில் ரஷ்ய அணு ஆயுத படைகளின் ஒத்திகை நிகழ்ச்சியை ரஷ்ய அதிபர் புதின் நேற்று நடத்தினர். இந்த நிகழ்வில் உலகநாடுகளை மிரளவிடும் வகையில் தரைவழி, வான்வெளி என அனைத்திலும் பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அதேபோல் கண்டம்விட்டு கண்டம்பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை விமானம் மூலம் ஏவப்படும் ஏவுகணையையும், நீர்முழ்கி கப்பல், குண்டு வீச்சு விமானங்கள் ஆகியவையும் ஈடுபடுத்தப்பட்டன. இதனை அதிபர் நேரில் பார்வையிட்டார் அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு வழிகளில் ரஷ்யாவுக்கு அழுத்தம்கூடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த போர் ஒத்திகை நிகழ்ச்சி அமெரிக்கவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக உள்ளது என உலக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.