தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாரணாசியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம் :மாநகராட்சி அதிரடி

வாரணாசி: 'பொது இடத்தில் எச்சில் துப்பினால், 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என உத்தர பிரதேசத்தின் வாரணாசி மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி லோக்சபா தொகுதியில் தான் பிரதமர் மோடி போட்டியிட்டு வென்றார். மாநகராட்சியான வாரணாசியை சுத்தமாக வைத்திருக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகளை மாநகராட்சி நிர்வாகம் புதிதாக அமல்படுத்தியுள்ளது.

Advertisement

வாரணாசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா,"உத்தர பிரதேச திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகள் (2021) வாராணசியில் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.250, வாகனங்களில் இருந்தபடி குப்பையை வீசினாலோ எச்சில் துப்பினாலோ ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இதுபோல சாலையில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு உணவுப் பொருள் வழங்கினால் ரூ.250, பூங்கா, சாலை உள்ளிட்ட பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் ரூ.750, குப்பைகளை மூடப்படாத லாரிகளில் எடுத்துச் சென்றால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்," என்றார்.

Advertisement