தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 பதவிக்கு இன்று எழுத்து தேர்வு: 3935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் பேர் போட்டி; செல்போன், ஸ்மார்ட் வாட்ச் அணிந்து செல்ல தடை

Advertisement

சென்னை: குரூப் 4 பதவியில் காலியாக உள்ள விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3935 பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று காலை நடக்கிறது. 13.89 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 25ம் தேதி வெளியிட்டது. அதில், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) 215 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 1,621, இளநிலை வருவாய் ஆய்வாளர் 239, தட்டச்சர் 1,099, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) 368, உதவியாளர் 54, கள உதவியாளர் 19, வனக் காப்பாளர் 62, ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35, வனக்காவலர் 71 உள்ளிட்ட 25 வகையான பணிகளில் 3935 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே (ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விண்ணப்பிக்க மே 24ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். ஆனால் இத்தேர்வுக்கு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். 13 லட்சத்து 89 ஆயிரத்து 743 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 5 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 பேரும், பெண்கள் 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பேர், மூன்றாம் பாலினத்தவர் 117 பேர் அடங்குவர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக 38 மாவட்டங்களில் 314 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பு பணியில் 4,922 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் குரூப் 4 தேர்வை 94 ஆயிரத்து 848 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 311 இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

காலை 9.30 மணி தொடங்கும் என்று பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். பகுதி ‘‘அ”வில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 வினாக்களும், பகுதி ‘‘ஆ’’ வில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு மனக்கணக்கில் 25 வினாக்கள் என 100 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால்டிக்கெட்டை கட்டாயம் தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.

தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும். தேர்வு மையத்தின் அனைத்து நுழைவாயில்களும் தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக மூடப்படும். அதன் பின்னர் வரும் யாரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வின் போது தேர்வர்கள் கருப்பு மை பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான பொருட்களை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* தேர்வுக்காக 38 மாவட்டங்களில் 314 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பு பணியில் 4,922 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர்.

* தேர்வு எழுதுவோர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டை கட்டாயம் தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.

* தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும்.

* தேர்வுக்கான வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை டிஎன்பிஎஸ்சி தலைவர் வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழக முழுவதும் இருக்கக்கூடிய மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் தனியார் சொகுசு பஸ்சில் வினாத்தாள் சில இடங்களில் அனுப்பி வைக்கப்பட்டதோடு, பஸ்சின் நுழைவுக் கதவை ஏ4 பேப்பரை கொண்டு சீல் வைத்தது பேசுபொருளானது. வழக்கமாக கொண்டு செல்வது போல, கண்டெய்னர்களில் எடுத்துச் செல்லாமல், இதுபோல் பஸ்களில் எடுத்துச் செல்வதால் வினாத்தாள் கசிந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து டிஎன்பிசி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறுகையில், குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்காள் அனைத்தும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது வரை வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை. மேலும் மதுரையில் வினாத்தாளை கண்டெய்னர் மூலமாக எடுத்துச் செல்லாமல் இதுபோன்ற தனியார் பேருந்துகள் மூலம் எடுத்துச் சென்றது குறித்து விளக்கம் கேட்டு இருக்கிறோம். இருப்பினும் மதுரையில் பேருந்தில் போலீஸ் பாதுகாப்புடன் தான் வினாத்தாளை கொண்டு சென்று உள்ளனர். வினாத்தாள் கசிய வாய்ப்பு இல்லை’’ என்றார்.

Advertisement

Related News