வன்னியர் சங்க அலுவலகத்தில் கொடியேற்ற தடை..!!
திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுலகத்தில் பாமகவின் இரு தரப்பினரும் கொடியேற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. அன்புமணி தலைமையில் கொடியேற்ற தயார் செய்தபோது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ராமதாஸ், அன்புமணி இருதரப்பினர் இடையே மோதல் காரணமாக வன்னியர் சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement