வாணியம்பாடி அருகே பழைய இரும்பு பொருட்கள் குடோனில் தீ விபத்து..!!
உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் குடோனில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், அதற்க்குள் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதனைத் தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.