தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வந்தே மாதரம் பாடல் விவாதத்தின் போது என்ன தைரியம் இருந்தால் இப்படி பேசுவீர்கள்?: எதிர்க்கட்சிகளை பார்த்து சீறிய ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் தொடர்பான விவாதத்தின்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கோபமடைந்து எச்சரித்தார். மக்களவையில் நேற்று ‘வந்தே மாதரம்’ பாடல் தொடர்பான விவாதத்தின் போது ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘சுதந்திரப் போராட்டத்தின் போது மிகமுக்கிய வீரமுழக்கமாகத் திகழ்ந்த ‘வந்தே மாதரம்’ பாடல், ஜவஹர்லால் நேருவின் காலத்தில் இருந்தே வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகவும் காங்கிரஸ் கட்சியால் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டது.

Advertisement

புனிதமான இந்தப் பாடலின் இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டியது நமது தார்மீகக் கடமை. இந்தியர்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்துள்ள புனித உணர்வே ‘வந்தே மாதரம்’ என்ற பாடலாகும்’ என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், அவரைப் பேசவிடாமல் தடுத்து இருக்கையில் அமருமாறு குரல் எழுப்பினர். இதனால் நிதானம் இழந்த ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கடும் சினத்துடன் ஆவேசமாகத் திரும்பினார்.

‘என்னை யாரால் உட்கார வைக்க முடியும்? என்ன தைரியம் இருந்தால் இப்படிப் பேசுவீர்கள்? என்ன பேச்சு பேசுகிறீர்கள்... அமைதியாக உட்காருங்கள்’ என்று ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்தார். மூத்த அமைச்சரான அவர் இவ்வாறு கோபப்பட்டதால் அவையில் பெரும் கூச்சலும் பதற்றமும் ஏற்பட்டது. இதனையடுத்து நிலைமையை உணர்ந்த சபாநாயகர் ஓம் பிர்லா, உடனடியாகத் தலையிட்டு உறுப்பினர்களை அமைதிப்படுத்தினார்.

Advertisement