வந்தே பாரத் ரயில்களில் ரயில் புறப்படும் 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தற்போது, தமிழகத்தில் 8 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் காலியாக இருந்தால் வழியில் உள்ள ரயில் நிலையங்களிலும் பயணிகள் ரயில் வருகைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி (ஜூலை 17) முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு இரு மார்க்கங்களிலும் (20627/20628) மற்றும் மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கும் (20671) இந்த புதிய வசதி மூலம் பயண சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மங்களூரு - திருவனந்தபுரம் - மங்களூரு, கோயம்புத்தூர் - பெங்களூரு, மங்களூரு - கோவா மட்கான், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா வந்தே பாரத் ரயில்களிலும் இந்த புதிய வசதி மூலம் பயணிச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.