வந்தவாசி அருகே டிஜிட்டல் முறை பயிர் சாகுபடி கணக்கெடுப்பு
*வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
Advertisement
வந்தவாசி : வந்தவாசி வட்டார வேளாண்மை துறை சார்பில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுக்கும் பணி நேற்று பிருதூர் கிராமத்தில் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் தலைமையில் நடந்த இப்பணியினை திருவண்ணாமலை மாவட்ட இணை இயக்குனர் கண்ணகி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான நெல் பயிர் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள அனைத்து பயிர்களையும் கணக்கெடுப்பு பணி நடந்தது. அப்போது வேளாண்மை உதவி அலுவலர்கள் சரவணகுமார், ஆஷா, ஆத்மா திட்ட மேலாளர் சிந்தாமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Advertisement