வாங்கக் கடலில் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகர்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: சென்னையில் இருந்து 730 கிலோ மீட்டர் தொலைவில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 17 கி.மீ. வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாகவும், தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நவ.29, 30 ஆகிய தேதிகளில் 21 செ.மீட்டருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 640 கி.மீ தெற்கு, தென்கிழக்கில் புயல் மையம் கொண்டுள்ளது.