மணப்பாறை அருகே சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து : காயமடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
இதில் இருந்து 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது . இந்த நிகழ்வு இடத்தில் l வடிவிலான வளைவாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நான்கு வலி சாலையாக இருப்பதால் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகின்றன இதனை வந்து சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சாலையில் கற்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
45 நிமிடக்களுக்கு மேலாக மறியல் போராட்டம் நடந்துவருகிறது புத்தாநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை மக்கள் கைவிடவில்லை. நெடுசாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.