வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி
இந்த விபத்தில் வேனில் பயணித்த 11 பேரில் 9 பேர் உயிரிழந்தனர். இதில் 4 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குவர். மற்ற இருவர் படுகாயமடைந்து தாண்டலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடம் தற்காலிக, குறுகிய பாதையாக இருந்ததால், லாரிதனது கட்டுப்பாட்டை இழந்து வேனின் மீது விழுந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல் கண்காணிப்பாளர் பத்மவிலோசன் ஷுக்லா உறுதிப்படுத்தினார். லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த துயர சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.