வால்பாறைக்கு இ-பாஸ் அமல் தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
சென்னை: வன சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளதுபோல் வால்பாறையிலும் நவம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் சீனிவாசன், வால்பாறையில் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டு அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை பின்பற்றி துரிதமாக செயல்பட்ட அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் இந்த நடைமுறையை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Advertisement
Advertisement