வால்பாறையில் வெண்மை நிறமாக மாறிய தேயிலை தோட்டம்
இந்நிலையில் மழை, வெயில், பனி என வால்பாறையில் காலநிலை மாறுபட்டு காணப்படுகிறது. எனவே கவாத்து வெட்டிய தேயிலை தோட்டங்களில் பூஞ்சை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த லைம் மருந்து தெளிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தேயிலை தோட்டங்கள் வெள்ளை அடித்தாற்போல காணப்படுகிறது. பசுமை தேயிலை தோட்டங்களுக்கு இடைய வெள்ளை அடித்தாற்போல காணப்படும் தேயிலை தோட்டங்கள் அழகாக காட்சி அளிக்கிறது.