வாளவாடி-திருமூர்த்திமலை சாலையில் பிளவு
Advertisement
உடுமலை : உடுமலையில் இருந்து திருமூர்த்திமலைக்கு செல்லும் சாலையில் தினசரி ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடியிருப்போரும் இந்த சாலை வழியாக செல்கின்றனர்.
இதில் வாளவாடிக்கும், திருமூர்த்திமலைக்கும் இடையே ஓரிடத்தில் சாலை பிளவுபட்டு பெரிய பள்ளமாக காட்சி அளிக்கிறது. பல மீட்டர் தூரத்துக்கு இவ்வாறு பிளவு காணப்படுகிறது.
இருசக்கர வாகனங்கள் சென்றால் பாதியளவு உள்ளே புதைந்துவிடும் அளவுக்கு பள்ளம் உள்ளது. நான்கு சக்கர வாகனங்களின் டயர் இறங்கினாலும் சிக்கல்தான்.
இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.பொதுமக்கள் கூறுகையில், ‘இவ்வளவு பெரிய சாலை பிளவை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். விபரீதம் நிகழும் முன் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்” என்றனர்.
Advertisement